இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் ( deflation) ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் 39 வருடங்களின் பின்னர் முதன் முதலாக September 2024 இல் #பணச்சுருக்கம் ( deflation) ஏற்பட்டுள்ளது. இதுவரை பணவீக்கம் ( inflation) என்ற சொல்லையே கேட்டுக் கேட்டு பழக்கப்பட்ட நமக்கு பணச்சுருக்கம் என்ற சொல் இம்முறை கேள்விப்பட்டுள்ளது. வரலாற்றில் அதிக பணவீக்கம் ஏற்பட்டது September 2022 இல் நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெணில் ஏற்றப்பட்டுள்ள மாற்றம் குறித்து சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிடபட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக (பணச்சுருக்கம் அடைந்து) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஆகஸ்ட் 2024 இல் 0.8 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3 சதவீதமாக (பணச்சுருக்கம் அடைந்து) குறைவடைந்துள்ளது. மேலும், 2024 ஓகஸ்ட் 0.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக (பணச்சுருக்கம் அடை...