கண்டி விவேகானந்தா ‘கல்லூரியாக’ தரமுயர்வு
கண்டி, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதை முன்னிட்டு விஷேட நிகழ்வொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கலையரசி தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய 187 ஆண்டு வரலாற்றை கொண்ட இப்பாடசாலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதானது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதிபர் கலையரசி மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கொண்டாடும்நிகழ்விற்கு, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் , மத்திய மாகாண பிரதம செயலாளர், கல்விச்செயலாளர், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் விவேகானந்தா கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமையையிட்டு பழைய மாணவர்களும், பாடசாலை சமூகம் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment