கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் - வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்!

 எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச் சீட்டை பெறுவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளத்தின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்கள்

இதற்குரிய கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



அத்துடன், பிரதேச செயலக காரியாலயங்களில் கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்ய முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் ஊடாக விண்ணப்பதாரரின் முகவரிக்கு கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.




Comments

Popular posts from this blog

கண்டி விவேகானந்தா ‘கல்லூரியாக’ தரமுயர்வு

BREAKING UPDATE

தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் WARREN BUFFET