வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!
வாகனங்களுக்காக ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 22 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், ஏனைய முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 14 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
மகிழுந்து மற்றும் சிற்றூந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து மற்றும் பாரவூர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தேவை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 45 லீற்றராகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
ஏனைய வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம், 45 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளதாகவும்,இந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பானது எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment