கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! இந்த தகமைகள் உள்ளவர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.!!

 கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்..! இந்த தகமைகள் உள்ளவர்கள் உடன் விண்ணப்பியுங்கள்.!!

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.





விண்ணப்பங்களின் போது முன்னுரிமை சுகாதார துறை,விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள்,தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்,போக்குவரத்து,விவசாயம் மற்றும் விவாசய உணவு

ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு அதிகளவ முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியாற்றல் காணப்பட்டால் அதுவும் விசேட தகைமையாகக் கருத்திற் கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த பிரதான ஐந்து துறைகளைச் சேர்ந்த 82 தொழில்களுக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ப்ரேசர் அறிவித்துள்ளார்.

நாட்டில் தொழிற்சந்தையில் சில துறைகளில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய தகுதியான பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

கண்டி விவேகானந்தா ‘கல்லூரியாக’ தரமுயர்வு

BREAKING UPDATE

தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் WARREN BUFFET