கண்டி, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதை முன்னிட்டு விஷேட நிகழ்வொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கலையரசி தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய 187 ஆண்டு வரலாற்றை கொண்ட இப்பாடசாலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதானது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதிபர் கலையரசி மேலும் தெரிவித்துள்ளார். இதனைக் கொண்டாடும்நிகழ்விற்கு, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் , மத்திய மாகாண பிரதம செயலாளர், கல்விச்செயலாளர், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் விவேகானந்தா கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமையையிட்டு பழைய மாணவர்களும், பாடசாலை சமூகம் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
நாளை முதல் மின்சார கட்டணம் குறைப்பு! புதிய கட்டண விபரம் இதோ! நாளை முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம் 2 ரூபாவினாலும், 30 முதல் 60 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 11 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 60 முதல் 90 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 12 ரூபாவினாலும், 90 முதல் 120 வரையிலான அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டுப் பாவனை மின் கட்டணம் 27 சதவீதத்தினாலும், மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறைவடைகின்றது.
தன் இறப்புக்குப் பின் உலகக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தன் சொத்தில் பங்கு: கோடீஸ்வரர் WARREN BUFFET. உ லகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், தனது இறப்பிற்கு பிறகு, தனது சொத்தில் இருந்து 96 பில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பங்கு சேரும்படி ஏற்பாடு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகில் பலர் பணம் சம்பாதிப்பதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு செயல்பாடுவார்கள். அதில், சிலர் மட்டுமே பணத்தோடு சேர்த்து புகழ், நன்மதிப்பு, சக மனிதர்களின் மரியாதை ஆகியவற்றையும் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்ட நபர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட். ஏற்கனவே தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை நன்கொடை மற்றும் தானத்திற்காக செலவிட்டு வரும் வாரன் பஃபெட், தான் மரணம் அடைந்த பிறகு 96 பில்லியன் டா சொத்துக்களை என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அனைவரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. அமெரிக்கரான வாரன் பஃபெட், Berkshire Hathaway நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். பங்குச்சந்தையில் புலியான இவர், பல்வே...
Comments
Post a Comment