வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், இன்றைய தினம் அதிக வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பிரதேசங்களில், மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 35.7 பாகை செல்ஸியஸ் அளவிலான உச்சபட்ச வெப்பநிலை, முல்லைத்தீவு மற்றும் பொத்துவில் பகுதிகளில் பதிவாகியுள்ளது. 14 பாகை செல்ஸியஸ் அளவிலான குறைந்தபட்ச வெப்பநிலை, நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித...